| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3101 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ? பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக் கொண்டு, ஸகல பதார்த்தங்களும் நீயிட்ட வழக்கான பின்பு நீயே யுன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேணமென்கிறார்.) 7 | ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக் கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7 | இ உலகத்து,I ulagathu - இந்த லோகத்தில் நிற்பனவும்,Nir panavum - ஸ்தாவரப் பொருள்களும் திரிவனவும்,Thirivanavum - ஜங்கமப் பொருள்களும் நீயே ஆய்,Neeye aay - நீயாகவே யிருந்து மற்று ஒரு பொருளும் இன்றி,Matru oru porulum indri - நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி நீ நின்றமையால்,Ne ninradamaiyal - நீயிருப்பதனாலே நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய,Noy moopu pirappu irappu pini enra ivai ozhiya - மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி அடியேனை,Adiyenai - அடியனான வென்னை கூயே கொள்,Kuye kol - அழைத்துக் கொண்டருள வேணும்; கொடு உலகம்,Kodu ulagam - கொடிய இவ்வுலகத்தை காட்டேல்,Kaattele - இனிமேலும் காட்டவேண்டா. |