திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3102 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (‘ஆழ்வீர்! நீர் விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.) 8 | காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8 | பதவுரை Show / Hideநீ,Nee - நீ (எம்பெருமானே) காட்டி,Kaatti - படைக்கும்போது பிரகாசிப்பித்து கரந்து,Karandhu - (பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து உமிழுத்,Uzhuth - மறுபடியும் வெளிப்படுத்துகின்ற நிலம் நீர் தீ விசும்பு கால்,Nilam neer thee visumbu kaal - பஞ்ச பூதங்களையும் ஈட்டி வைத்து,Eetti vaithu - ஒன்றாகத் திரட்டி வைத்து அமைத்த,Amaitha - ஒழுங்கு படுத்திய இமையோர் வாழ தனி முட்டை,Imayor vaazha thani muttai - பிரமாண்டமாகிற கோட்டையினில்,Kottaiyinil - கோட்டையில் நின்றும் என்னை கழித்து,Ennai kuzhithu - என்னை அப்புறப்படுத்தி உன்,Un - உன்னுடைய கொடு சோதி உயரத்து,Kodu sothi uyarathu - மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே கூட்டு அரிய,Kootu ariya - கூடுதற்கரியான திருவடிக்கண்,Thiruvadikkan - திருவடிகளிலே எஞ்ஞான்று,Yennyantru - என்றைக்கு கூட்டுதி,Kootuthi - கூட்டிக்கொள்வாய்! |