| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3108 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 3 | பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக் கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3 | பரந்த, parandha - விஸ்தீர்ணமான தெய்வமும், dheivamum - தேவதாவர்க்கங்களையும் பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும் படைத்து, padaithu - ஸ்ருஷ்டித்தும் அன்று, andru - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி கரந்து, karandhu - உள்ளே யொளித்து வைத்தும் உமிழ்ந்து, umizhndhu - பிறகு வெளிப்படுத்தியும் கடந்து, kadanthu - (மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும் இடந்தது, idandhadhu - (மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை கண்டும், kandum - பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும் தெளிய கில்லீர், theliya killeer - தெளியமாட்டாத பல் உலகீர், pal ulageer - பலவகைபட்ட உலகத்தவர்களே! அமரர், amarar - தேவர்கள் சிரங்களால் வணங்கும், sirangalaal vanangum - தலையால் வணங்கப் பெற்ற திருகுருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற பரன், paran - பரம புருஷனுக்கு திறம் அன்றி, thiram andri - பிரகாரமாயல்லது மற்று, matru - வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு தெய்வம் இல்லை, dheivam illai - தேவதை கிடையாது பேசுமின், pesumin - அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள். |