திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3117 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3117திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து, பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல, அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.) 1
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1
பதவுரை Show / Hide
கைஆர் சக்கரத்து,Kaiar chakkarattu - திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும்
என் கரு மாணிக்கமே,En karu maanikame - எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே!
என்று என்று,Enru enru - என்று பலகாலும்
பொய்யே கைம்மை சொல்லி,Poyye kaimmai solli - பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி (அந்த வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி)
புறமே புறமே ஆடி,Purame purame aadi - விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும்
மெய்யே பெற்றறோழிந்தேன்,Meyye petraroazhinden - மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;
விதி வாய்க்கின்று,Vidhi vaaykinru - பகத்திருபை பலிக்குமிடத்தில்
காப்பர் ஆர்,Kaappar aar - அதைத் தடுக்கவல்லார் யார்?
கண்ணபிரான்,Kannapiraan - ஸ்ரீக்ருஷ்ணனே!
இனி,Ini - உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு
போனால்,Ponaal - என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில்
அறையோ,Arayyo - தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.)
ஐயோ,Aiyyo - சந்தோஷக்குறிப்பு (இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.)