| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3118 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தன் திறத்திலே ப்ரேம கந்த ரஹிதனாய் இருந்து வைத்து நிரதிசய ப்ரேம யுக்தர் சொல்லும் பாசுரங்களை நான் சொல்ல சர்வேஸ்வரனான தான் அத்யந்த நிஹீன தரனான என்னுள்ளே ச பரிகாரமாக வந்து புகுந்து அருளினான் என்கிறார்.) 2 | போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே! தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத் தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான் வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2 | மா மருதிந் நடுமே,Maa marudhin nadume - பெரிய மருதமரங்களினிடையே போனாய்,Poonaai - தவழ்ந்து சென்றவனே! என்,En - எனக்கு விதேயமான பொல்லா மணியே,Polla maniye - துளைபடாத ரத்தினம் போன்றவனே! தேனே,Thene - தேன்போன்றவனே! இன் அமுதே,In amuthe - இனிமையான அம்ருதம் போன்றவனே! என்று என்றே,Enru enre - என்று இவ்வண்ணமாகவே சில கூத்து சொல்ல,Sila koothu solla - சில பொய்யுரைகளைச் சொல்ல எம்பெருமான் அவன் தான்,Emperumaan avan thaan - அவ்வெம் பெருமானானவன் என் ஆகி ஒழிந்தான்,En aaki ozhindhaan - எனக்கு விநேயனாய்விட்டான்; வான் மா நிலம் மற்றும் முற்றும்,Vaan maa nilam matrum mutrum - (அன்றியும்) அவனடைய விபூதிகளெல்லாம் என் உள்ளன,En ullana - என்னுள்ளே நடத்தும் படியாயின. |