| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3119 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக் கொண்டிருந்த வாற்றைச்சொல்லி, பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடு கூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.) 3 | உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3 | வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலிலே அணை,Anai - (திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது கிடந்தாய்,Kidanthai - பள்ளிகொள்ளும் பெருமானே! உள்ளன,Ullana - எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன் மற்று உள் ஆ,Matru ul aa - உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும் புறமே,Purame - வெளிவேஷமாக, வள்ளல் மணிவண்ணனே என்று என்றே,Vallal Mani annane Enru Enre - வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும் சில மாயம் சொல்லி,Sila Maayam Solli - சில பொய்யுரைகளைச் சொல்லி உன்னையும் வஞ்சிக்கும்,Unnaiyum Vanchikkum - (ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான கள்ளம் மனம் தவிர்த்து,Kallam Manam Thavirttu - கபடமான நெஞ்ச தவிரப்பெற்று உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்,Unnai Kandu Kondu Uynthu Ozhindhen - உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்; இனி,Ini - இனிமேல் உன்னை விட்டு,Unnai Vittu - பரமயோக்யனான உன்னைவிட்டு என் கொள்வன்,En Kolvan - வேறு எதைக் கைக் கொள்ளுவேன்? |