திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3120 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால் அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார்.) (இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;) (கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது; காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார். கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம் தேஹ ஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயே போக்கி உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் – என்று சில ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள்.) 4 | என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4 | பதவுரை Show / Hideகண்ணனே,Kannané - எம்பெருமானே! வன் கள்வனேன்,Van Kalvanén - பஹாரக்கள்வனாகிய நான் உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும்,Unnaivittu En Kolvan Ennum Vaasagangal Solliyum - உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும் மனத்தை வலிந்து,Manathai Valinthu - விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு கண்ண நீர் சுரந்து,Kanna Neer Surandu - அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி நின் கண்,Nin Kan - உன்னிடத்திலே நெருங்க வைத்து,Nerunga Vaithu - மனத்தை ஊன்றவைத்து எனது ஆவியை,Enathu Aaviyai - என் ஆத்மாவை நீக்க கில்லேன்,Neeka Killeen - ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவிக்க முடியாதவனானயிருக்கின்றேன்; என் கண்,En Kan - என் பக்கலிலுள்ள மலினம்,Malinam - அவித்யா தோஷத்தை அறத்து,Arathu - போக்கி என்னை கூசி அருளாய்,Ennai Koosi Arulaai - என்னை உன்பக்கலிலே அழைத்துக் கொண்டருள வேணும். |