| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3121 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) ((கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.) 5 | நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத் திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால் புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5 | கண்ணபிரானை,Kannapiraanai - ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும் விண்ணோர் கருமாணிக்கத்தை,Vinnor Karumanikkathai - நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும் அமுதை,Amudhai - அமிருதம்போன்றவனுமான உன்னை எண்ணியும்,Enniyum - கிட்டியிருக்க செய்தேயும் நன்னகில்லேன்,Nannagilleen - கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்) நடுவே,Naduvé - இடைச்சுவராக ஓர் உடம்பில் இட்டு,Or Udambil Ittu - ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து பல செய்வினைகள் கயிற்றால்,Pala Seivinaigal Kayirtraal - பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே திண்ணம் விழுந்த கட்டி,Thinnam Vizhuntha Katti - மிகவும் திடமாகக்கட்டி புண்ணை,Punnai - ஹேயதோஷங்களை மறைய வரிந்து,Maraiya Varinthu - தெரியாதபடியாகப் பண்ணி என்னை,Ennai - அசந்தனான என்னை பதமே,Pathame - உனக்குப் புறம்பான விஷயங்களிலே போர வைத்தாய்,Pora Vaithai - தள்ளிவைத்தாய். |