திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3122 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3122திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார். இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.) 6
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும் முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன் நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண் அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6
பதவுரை Show / Hide
இரு,Iru - புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட
வல் விளையர்,Val Vilaiyar - பிரபல கருமங்கள்
புறம் அற,Puram Ara - புச்சம் தோன்றாதபடி
முறை முறை,Murai Murai - தோல் மாறுங் கணக்கிலே
புகல் ஒழிய,Pugal Ozhia - புகுவது தவிரும்படியாக
நிறம் உடை நால் தட தோள்,Niram Udai Naal Thada Thol - அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த திருப்பவளத்தையும்
செய்ய தாமரைகள்,Seyya Thaamaraigal - செய்தாமரைக் கண்களையும்
கட்டிக்கொண்டு,Kattikondhu - ஒன்றோடொன்று பிசிறிக்கொண்டு
குமைக்கும்,Kumaikkum - நலிவதற்கு இடமான
ஆக்கை,Aakkai - சரீரத்தில்
அறம் முயல் ஆழி அம் கை,Aram Muyal Aazhi Am Kai - ரக்ஷணமாகிற தருமத்திலே ஊக்கமுடைய திருவாழியினாலே அழகுபெற்ற திருக்கைகளையும் உடைய
கரு மேனி,Karu Meni - கரிய திருமேனியை யுடையவான
அம்மான் தன்னை,Ammaan Thannai - எம்பெருமானை
கண்டு கொண்டு ஒழிந்தேன்,Kandu Kondu Ozhindhen - ஸேவித்து அநுபவித்து விட்டேன்.