| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3123 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி யுண்டு! என்று பிற்காலிக்க வேண்டி யிருக்கச் செய்தேயும் அவனுடைய க்ருபா ரஸம் கரை யழியப் பெருகின படியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார்.) 7 | அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்? எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர் கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7 | ஆழி பிரான் அம்மான் அவன்,Aazhi Piraan Ammaan Avan - திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான் எளவிடத்தான்,Ezhavidathaan - எவ்வளவு பெரியவன்! யான் ஆர்,Yaan Aar - நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க) கைம்மா துன்பு ஒழித்தாய் என்று,Kaimmaa Thunbu Ozhiththai Endru - கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று கை தலை பூசல் இட்டே,Kai Thalai Poosal Ittae - சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ணி மெய் மால் ஆய் ஒழிந்தேன்,Mey Maal Aay Ozhindhen - ருஜுவான பிரேமமுடையவனாக ஆய்விட்டேன்! எம் பிரானும்,Em Piraanum - ஸர்வேசுவரனும் என் மேலான்,En Maelaan - என் மீது அன்பு பூண்டவனாயினான்; (ஆதலால்) எம்மா பாவியர்க்கும்,Emma Paaviyarkkum - எவ்வளவோ மஹாபாபிகளானவர்களுக்கும். விதி வாய்க்கின்ற,Vidhi Vaaykkindra - தப்பவொண்ணாத அருளாகிற விதி வலிப்பதாமளவில் வாய்க்கும் கண்டீல்,Vaaykkum Kandeel - பலித்தேவிடும். |