திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3126 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3126திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.) 10
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க் கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10
பதவுரை Show / Hide
மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய்,Meen Aay Aamaiyam Aanar Singamum Aay Kurai Aay - மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும்
கான் ஆர் எனமும் ஆய் இன்னம்,Kaan Aar Enamum Aay Innam - வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி
கற்கி ஆம்,Karki Aam - கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும்
கார்வண்ணன்,Kaarvannan - காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான்
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு,Aal Udaiaan Aanaan Endra Ahadeh Kondum - என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு
உகந்து வந்து,Ugandhu Vandhu - உகப்போடோளந்து
தானே இன் அருள் செய்து,Thaane Inn Arul Seydhu - தானாகவே இனிய கிருபையைப் பண்ணி
என்னை முற்றவும் தான் ஆனான்,Ennai Muttavum Thaan Aanaan - எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான்.