| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3127 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீ மிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11 | கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11 | கார் வண்ணன்,Kaar Vannan - மேகவண்ணனும் கண்ணபிரான்,Kannapiraan - ஸர்வஸுலபனும் கமலம் தட கண்ணன் தன்னை,Kamalam Tada Kannan Thannai - தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து. ஏர் வளம் ஒண் கழனி,Aer Valam On Kalani - எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொன்ன,Sonna - அருளிச்செய்த சீர் வண்ணம் ஒண் தமிழர்கள்,Seer Vannam On Tamilarkal - சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான இவை ஆயிரத்துள் இ பத்தும்-;,Ivai Aayiraththul I Patthum-; - இவை ஆயிரத்துள் இ பத்தும்-; ஆர் வண்ணத்தால்,Aar Vannathaal - அமிருதபானம் பண்றுமாபோலே உரைப்பர்,Uraippar - ஓதுமவர்கள் பொலிந்து,Polindhu - ஸம்ருத்தியோடே யிருந்து அடிகீழ்,Adikeezh - அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே புகுலார்,Pugulaar - புகப்பெறுவர்கள். |