திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3129 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3129திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.) 2
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2
பதவுரை Show / Hide
வண்டு ஆர்,Vandu Ar - (மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய
தண் அம் துழாயான்,Than Am Thuzhaayan - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான
மாதவன்,Madhavan - திருமாலினது
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இந்நிலத்திலே
பண்,Pan - இராசங்களை
பாடி நின்ற ஆடி,Paadi Nindra Aadi - பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு
பரந்து,Parandhu - எங்கும் பரவி
திரிகின்றன,Thirigindran - எங்கும் பரவி உலாவுகின்றனர்;
கண்ணுக்கு இனியன,Kannukku Iniyan - (இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை
கண்டோம் கண்டோம் கண்டோம் ,Kandom Kandom Kandom - கண்டோம்-;
தொண்டீர் எல்லீரும்,Thondir Ellirum - பாகவதர்களான ஸகல பேர்களும்
வாரீர்,Vaareer - வாருங்கள்;
தொழுது தொழுது நின்று,Thozhudhu Thozhudhu Nindru - நன்றாகவணங்கி
ஆர்த்தும்,Aarthum - ஆரவாரிப்போம்.