திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3130 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3130திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ((திரியும் கலியுகம்) நித்ய ஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்று கூடிப் பரிமாறலாம்படி ஸம்ஸார மண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.) 3
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக் கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3
பதவுரை Show / Hide
திரியும்,Thiriyum - தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான
கலியுகம்,Kaliyugam - கலியுகமானது
நீங்கி,Neengi - தொலையப்பெற்று
பெரிய,Periya - தருமந் சிறந்த
கிதயுகம்,Kidayugam - கிருதயுகமானது
பற்றி,Pattiri - வந்து புகுந்து
தேவர்கள் தாமும் புகுந்து,Devargal Thamum Pugundhu - தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி
பேர் இன்பம் வெள்ளம் பெருக,Per Inbam Vellam Perukka - மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன்,Kariya Mugil Vannan - காளமேகவண்ணனாயும்
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்வண்ணனாயுமுள்ள
எம்மான்,Emman - எம்பெருமானுடைய
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இவ்விபூதியிலே
இரிய புகுந்து,Iriya Pugundhu - மிக்க கோலாஹலங்களுடன் வந்து
இசை பாடி,Isai Paadi - கீதங்களைப் பாடிக் கொண்டு
எக்கும்,Eggum - எல்லாவிடங்களிலும்
இடம் கொண்டன,Idam Kondan - வியாபித்துவிட்டார்கள்.