திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3131 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3131திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார்.) 4
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4
பதவுரை Show / Hide
இடம் கொள்,Idam Kol - எங்கும் நிறைந்த
சமயத்தை எல்லாம்,Samayathai Yellam - துஷ்டமதங்களையெல்லாம்
எடுத்து களைவன போலே,Eduthu Kalaiyavan Pole - வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே
தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்,Thata Kadal Palli Peruman Thannudaiya Poothangaley Aay - ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து
கிடந்தும்,Kidandhum - படுத்துக்கொண்டும்
இருந்தும்,Irundhum - உட்கார்ந்துகொண்டும்
எழுந்தும்,Ezundhum - நின்று கொண்டும்
பல பல கீதம் பாடி நடந்தும்,Pala Pala Geetham Paadi Nadandhum - பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்
பறந்தும்,Parandhum - தரையில் கால் பாவாதபடி
குனித்தும்,Kunithum - கூத்தாடிக்கொண்டு
நாடகம் செய்கின்றன,Nadagam Seyginran - களித்துத் திரியா நின்றார்கள்.