| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3133 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய ஸகல க்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத் எங்கும் பரந்தார்கள், அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கி யருளிச் செய்கிறார்.) 6 | கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம் நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6 | கொன்று,Konru - கொலைசெய்து உயிர் உண்ணும்,Uyir Unnum - பிராணனைமுடிக்குமதான விசாதி,Visaathi - வியாதியும் பகை,Pagai - துவேஷமும் பசி,Pasi - பசியும் (முதலான) தீயன எல்லாம்,Theeyan Ellam - மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும் இ உலகில் நின்று கடிவான்,E Ulagil Nindru Kadivan - இவ்விபூதியலே தொலைப்பதற்காக நேமி பிரான் தமர்,Nemi Piran Thamar - சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள் போந்தார்,Pondhaar - வந்துள்ளார்கள்; இசை,Isai - இசைகளை நன்று பாடியும்,Nandru Paadiyum - நன்றாகப்பாடியும் துள்ளி ஆடியும்,Thulli Aadiyum - துள்ளிக்குதித்தும் ஞாலம்,Gnalam - இந்நிலத்திலே தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே! சிந்தையை,Sindhaiyai - உங்களது நெஞ்சை செம் நிறத்தி,Sem Niratti - செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து சென்று,Sendru - அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய் தொழுது,Thozhudhu - வணங்கி உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கோள். |