| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3134 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (எங்கும் பரம பாகவதர்களே மலிந்து விட்டார்களென்று பரம ஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார் காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்; அவர்கள் பகவத் பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்; அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார்.) 7 | நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள் மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7 | நும் உள்ளத்து,Num Ullathu - உங்கள் நெஞ்சுக்குள்ளே நிறுத்தி,Niruthi - வலியப்பிடித்து உட்காரவைத்து கொள்ளும்,Kollum - சிந்திக்கப்படுகின்ற தெய்வங்கள்,Dheyvangal - தேவதைகள் உய்யக்கோள்,Uyyakkol - உஜ்ஜீப்பித்துக்கொள்வதும் அவனோடே,Avanode - அந்த எம்பெருமான் தன்னோடே மறுத்தும் கண் கூர்,Maruthum Kann Koor - மீண்டு சென்று கிட்டிக்கிடீர்; மார்க்கண்டேயனும்,Maarkandeyanum - (இவ்விஷயத்தில்) மார்க்கண்டேயனும் கரி,Kari - ஸாக்ஷியாவன்; கறுத்த மனம் ஒன்றும் வேண்டா,Karutha Manam Ondrum Vaenda - (உங்களுக்கு) மலினமான நெஞ்சு சிறிதும் வேண்டியதில்லை; கண்ணன் அல்லால்,Kannan Allal - ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த ஸ்ரீமந் நாராயணனல்லது தெய்வம் இல்லை,Dheyvam Illai - பரதெய்வம் வேறுகிடையாது; இறுப்பது எல்லாம்,Iruppadhu Ellam - (ஆன பின்பு) நீங்கள் செலுத்தும் கடமைகளையெல்லாம் அவன் மூர்த்தியாயவர்க்கே இறுமின்,Avan Murthiyavarkke Irumin - அப்பெருமானுடைய சரீரபூதர்களுக்குச் செலுத்துகின்றோமென்கிற பிரதிபத்தியுடனே செலுத்துங்கள். |