| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3137 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஆச்ரயித்தே தம் பதவிகளைப் பெற்றார்கள்; நீங்களும் அவர்களைப் போலே எம்பெருமானை ஆச்ரயித்துப் பிழையுங்கோளென்கிறார்.) 10 | மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத் தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்! ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10 | நக்கன் பிரானோடு,Nakkan Piranoatu - சிவபிரானும் அயனும்,Ayanum - பிரமனும் இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும் முதல் ஆக,Mudhal Aaga - முதலாக தொக்க,Thokka - திரண்ட அமரர் குழாய்கள்,Amaraar Kuzhaigal - தேவவர்க்கங்கள் கண்ணன் திருமூர்த்தி,Kannan Thirumoorthi - எம்பெருமானது திருவடிவத்தை மேவி,Mevi - ஆசிரயித்து மிக்க உலகுகள் தோறும்,Mikka Ulakugal Thorum - பரம்பின் லோகங்கள் தோறும் எங்கும்,Engum - எவ்விடத்தில் பரந்தன,Paranthen - நல்ல பதவிகளைப்பெற்று வாழ்ந்தான்; தொண்டீர்,Thondir - தொண்டர்களே! ஒக்க,Okka - (நீங்களும்) அவர்களோடொக்க தொழ சிற்றிர் ஆகில்,Thoza Sitril Aakil - (எம்பெருமானைத்) தொழவல்லீர்களாகில் கலியுகம்,Kaliyugam - கலியுகதோஷம் ஒன்றும்,Ondrum - சிறிதும் இல்லை,Illai - உங்களுக்கு இல்லாதபடியாரும். |