திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3141 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3141திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறி கொடுத்த என்னை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள்.) 3
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான் பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன் தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3
பதவுரை Show / Hide
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்,Oorntha sakadam uthaiththa paathaththan - (நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும்
பேய்முலை,Peymulai - பூதனையின் முலையை
சார்ந்து,Saarnthu - மனம் பொருந்தி
சுவைத்த,Suvaiththa - பசையறவுண்ட
செம் வாயன்,Sem vaayan - செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே)
என்னை நிறைகொண்டான்,Ennai niraikondaan - என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்;
தீர்ந்த என் தோழீ,Theerndha en thozhi - எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே!
போர்ந்தும பெயர்ந்தும்,Poornthum peyarnthum - எந்தவிதத்திலும்
அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்,Avanoadu anri or sol ileen - அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்;
ஊரவர் கவ்வை என்செய்யும்,Ooravar kavvai enseyyum - ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்?