Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3143 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3143திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள்.) 5
கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5
கடியன்,Kadiyan - தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்
நெடியமால்,Nediya maal - போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;
உலகம் கொண்ட அடியன்,Ulagam kondu adiyan - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்;
அறிவு அருமேனி மாயத்தான்,Arivu arumeni maayathaan - நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;
கொடியன்,Kodiyaan - அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;
ஆகிலும்,Aakilum - இங்ஙனே யானாலும்
கொடிய என் நெஞ்சம்,Kodiya en nenjam - கொடிதான என்னுடைய மனமானது
அவனே என்று கிடக்கும்,Avane endru kidakkum - அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது;
எல்லே,Elle - என்னே!
துடிகொள் இடை,Thudikol idai - உடுக்கை போன்ற இடையையும்
மடம்,Madham - மடப்பத்தையுமுடைய
தோழீ,Thozhi - தோழியே!
அன்னை,Annai - என் தாய்
என் செய்யும்,En seiyyum - என்ன செய்யக்கூடும்?