திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3144 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3144திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள்.) 6
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்! என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6
பதவுரை Show / Hide
தோழிமீர்,Thozhimeer - தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர்,Munnai amarar mudhalvar - நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன்,Van dhuvaraapathi mannan - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன்,Manivannan - நீலமணிவண்ணனுமான
வாசுதேவன்,Vaasudevan - கண்ணபிரானாகிற
வலையுள்,Valaiyul - வலையினுள்ளே
அகப்பட்டேன்,Agappattaen - சிக்கிக் கொண்டேன்;
இனி,Ini - ஆன பின்பு
என்னை,Ennai - என் திறத்திலே
உமக்கு ஆசை இல்லை,Umakku aasai illai - நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;
அன்னை என் செய்யில்,Annai en seiyyil - தாய் எது செய்தால்தான் என்ன?
என் ஊர் என் சொல்லில்,En oor en sollil - என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?