திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3145 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3145திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.) 7
வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக் கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7
பதவுரை Show / Hide
கலைகொள்,Kalaikol - சேலை யணிந்ததும்
அகல்,Akal - அகன்றதுமான
அல்குல்,Alkull - நிதம்பத்தையுடைய
தோழீ,Thozhi - தோழியே,
என்னை,Ennai - என்னை
வலையுள்,Valaiyul - (தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே
அகப்படுத்து,Agappaduthu - சிக்கிக்கொள்ளும்படி செய்து
நல் நெஞ்சம்,Nal nenjam - (எனது) நல்ல நெஞ்சையும்
கூவிக்கொண்டு,Koovikkondu - அடியறுத்து அழைத்துக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை,Alaikadal palli ammaanai - அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய்.
ஆழி பிரான் தன்னை,Aazhi praan thannai - திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை
நம் கண்களால் கண்டு,Nam kangalal kandu - நமது கண்களாலே பார்த்து
தையலார் முன்பே,Thaiyalar munbae - (பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில்
தலையில்,Thalaiyil - தலையாலே
வணங்கவும் ஆம் கொலோ,Vanangavum aam kolo - வணங்கவும் கூடுமோ?