திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3147 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3147திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.) 9
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9
பதவுரை Show / Hide
என் தோழி,En thozhi - எனது தோழியே!,
என்னை,Ennai - என்பக்கலில் நின்றும்
நாணும்,Naanum - நாணத்தையும்
நிறையும்,Niraiyum - அடக்கத்தையும்
கவர்ந்து,Kavarnthu - கொள்ளை கொண்டு
நல் நெஞ்சம் கூய்க்கொண்டு,Nal nenjam kooykondru - (எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு
சேண் உயர் நாளத்து இருக்கும்,Sen uyar naalathu irukkum - மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற
தேவபிரான் தன்னை,Devapiraan thannai - நிதய் ஸூரிநாதனை
உலகு தோறு,Ulaku thoaru - ஒவ்வொருவலகத்திலும்
அவர் தூற்றி,Avar thootri - பழிதூற்றி
ஆம் கோணைகள் செய்து,Aam konaigal seydhu - செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து
கு திரி ஆய்,Ku thiri aay - அடங்காத பெண்ணாய்
மடல் ஊர்தும்,Madal oordhum - மடலூரக் கடவோம்;
ஆணை,Aanai - இது திண்ணம்