Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3148 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3148திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.) 10
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10
யா மடம் இன்றி,Yaa madam indri - ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்
தெருவு தோறு,Theruvu thooru - வீதிகள் தோறும் புகுந்து
அயல் தைய லார்,Ayal thaya laar - அயல் பெண்களும்
நாடும்,Naadum - ஸகல லோகமும்
நா மடங்கா பழி தூற்றி,Naa madangaa pazi thootri - நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி
இரைக்க,Irakka - இரைச்சல் போடும்படி
யாம்,Yaam - நாம்
மடல் ஊர்ந்தும்,Madal oordhum - மடலூர்ந்தாகிலும்
ஆழி அம் கை நம்பிரானுடைய,Aazhi am kai nambiraanudaiya - திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய
தூ மடல்,Thoo madal - பரிசுத்தமான இதழ்களையுடைய
தண் அம் துழாய் மலர்,Than am thuzhaay malar - குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை
கொண்டு,Kondu - அவன் தரப்பெற்று
சூடுவோம்,Sooduvom - தலையில் அணிவோம்.