| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3151 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா நின்றாய் – என்கிறாள்) 2 | ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால் காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2 | ஆழ் கடல்,Aazh kadal - ஆழ்ந்த கடலையும் மண்,Man - பூமியையும் விண்,Vin - ஆகாசத்தையும் மூடி,Moodi - மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி) மா வீசாரம் ஆய்,Maa veesaram aay - பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு வல்,Val - வலிதான ஓர் இரவு ஆய்,Or iravu aay - ஒரே ராத்திரியாய் நீண்டது,Neendadhu - நெடுகிச் செல்லா நின்றது; ஆல்,Aal - அந்தோ! காவி சேர் கண்ணன்,Kaavi seer kannan - நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான என் கண்ணனும்,En kannanum - எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும் வாராவி,Vaaraavi - வந்து முகங்காட்டுகின்றிலன் பாவியேன்,Paaviyin - பாவியான என்னுடைய நெஞ்சமே,Nenjame - மனமே! நீயும்,Neeyum - நீ தானும் பாங்கு அல்லை,Paangu allai - அணுகூலமாக இருக்கிறாயில்லை. இனி,Ini - இப்படியான பின்பு ஆவி காப்பார்,Aavi kaappar - பிராணனை ரக்ஷித்துத் தருவார் ஆர்,Aar - யாவர்? (ஒருவருமில்லை.) |