Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3152 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3152திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (அநிஷ்டங்களைத் தொலைக்க வல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறாள்.) 3
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும்
பாங்கு அல்லை காண்,Paangu allai kaan - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை;
நின் இரவும்,Ninn iravum - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும்
ஓயும் பொழுது இன்றி,Oyum pozhudhu indri - ஓயுங்காலம் இல்லாமல்
ஊழி ஆய்,Uuzhi aay - ஒரு கல்பமாய் கொண்டு
நீண்டது,Neendadhu - வளர்ந்து விட்டது;
ஆல்,Aal - அந்தோ;
காயும்,Kaayum - (விரோதிகளைக்) காய்கின்ற
சுடு சிலை,Sudu silai - கடிய சார்ங்கவில்லையுடைய
என் காகுத்தன்,En Kaaguthan - இராமபிரான்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றவன்;
வல்வினையேன்,Valvinaiyene - வலிய பாபத்தையுடையேனான நான்
பெண் பிறந்து,Pen pirandhu - பெண்ணாய்ப்பிறந்து
மாயும் வகை அறியேன்?,Maayum vakai arien - முடியும் வழியை அறிகின்றிலேன்.