| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3154 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்.) 5 | ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால் கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5 | அன்னையரும்,Annaiyarum - தாய்மாரும் தோழியரும்,Thozhiyarum - தோழிமாரும் நீர் என்னே என்னாதே,Neer enne ennaadhe - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல் நீள் இரவும்,Neel iravum - நீண்ட இராமுழுவதும் துஞ்சவர்,Thunjavar - உறங்காநிற்பர்கள்; ஆல்,Aal - அந்தோ!; கார் அன்ன,Kaar anna - மேகத்தையொத்த மேனி,Meni - திருமேனியையுடைய நம் கண்ணனும்,Nam kannanum - நமது கண்ணபிரானும் வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றிலன்; வல்வினை யென் பின் நின்று,Valvinai yen pin nindru - பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு பேர்,Per - என் பேர் என்னை மாயாது,Ennai maayadhu - என்னை முடிய வொட்டுகிறதில்லை என்னை ஆராய்வார் ஆர்,Ennai araayvaar aar - என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே! |