| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3156 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இப் பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றாள்.) 7 | காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச் சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த் தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7 | இவ்விடத்து,Ivvidathu - இந்நிலையில் காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பாரார்? சுங்கு இருளின்,Sungu irulin - நன்றாக சொரிந்த இருளையுடையதாயும் நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிதான பணித்துளியையுடையதாயும் சேண் பாலது,Sen paaladhu - மிக நீண்டிருப்பதான ஊழி ஆய்,Uuzhi aay - சல்பமாய்க்கொண்டு செல்கின்ற,Selginra - செல்லாநிற்கிற கங்குல் வாய்,Kangul vaay - ராத்திரியிடத்து தூ பால,Thoo paal - அழுக்கற்ற ஸ்வபாவத்தையுடையதாய் வெண்,Ven - வெளுத்ததான சங்கு,Sangu - சங்கையும் சக்கரத்தன்,Chakkarathan - சக்கரத்தையுமுடையனானவன் தோன்றான்,Thonaan - தோன்றிக்காட்சி தருகின்றவன் தெய்வத்தாள்,Deyvathaal - தேவதைகளே! நி பால கல் வினையேன்,Ni paal kal vinaiyene - மிகக் கொடியபாவங்களை யுடையேனான நான் என் செய்வேன்?,En seyven - என்ன பண்ணுவேன்? |