| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3157 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (தென்றலோ நலிகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றாள்.) 8 | தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய் மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும் கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8 | தெய்வங்காள்,Deyvangal - தெய்வங்களே! ஓர் இரவு,Or iravu - ஒரு இராப்பொழுதானது ஏழ் ஊழி ஆய்,Ezh uuzhi aay - ஏழு சல்பசாலமாய்க்கொண்டு மெய்,Mei - மெய்யே வந்து நின்று,Vandhu nindru - முன்னே வந்து நின்று என்ற ஆவி,Endra aavi - என்னுடைய உயிரை மெலிவிக்கும்,Melivikkum - இளைக்கப்பண்ணா நின்றது; கை வந்த சக்கரத்து,Kai vandha chakkarathu - கையிலே ஸஜ்ஜனாயிருக்கிற் திருவாழி யாழ்களையுடைய என் கண்ணனும்,En kannanum - எனது கண்ணபிரானும் வாரான்,Vaaraan - வருகின்றிலன் தைவந்த,Thaivandha - தடவினால் போலிருக்கின்ற தண் தென்றல்,Than thendral - குளிர்ந்த தென்றலானது வெஞ்சுடரில் அடும்,Vensudaril adum - வெள்ளிய நெருப்பிற் காட்டிலும் அதிகமாகச் சுடாநின்றது. |