| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3158 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இரவோ மிகவும் நலியா நின்றது; ஆதித்தியனும் ஆவிர்ப்பளிக்கின்றிலன்; எம்பெருமானும் வந்து தோன்றுகின்றிலன்; நான் நின்று நோவுபடுமித்தனை போக்கி என் பாதையைப் போக்குவார் ஆருமில்லையே யென்கிறாள்.) 9 | வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய் அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால் செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால் நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9 | வீங்கி இருளின்,Veengi irulin - மிகச் செறிந்த இருளையுடைத்தாய் நுண் துளி அய்,Nunn thuli ay - நுண்ணிய பனித்துளியை யுடையதாய்க் கொண்டு தான்,Thaan - இராப்பொழுதானது வெம் சுடரில்,Vem sudaril - வெவ்விய நெருப்பிற் காட்டில் சுடும்,Sudum - சுடர்கின்றது ஆல்,Aal - அந்தோ! (இந்த நிலைமையில்) அம் சுடா,Am sudaa - அழகிய ஒளியையுடையனான வெய்யோன்,Veyyon - ஸூரியனுடைய அணி நெடு தேர்,Ani netu ther - அழகிய பெரிய தேரும் தோன்றாது,Thonaadhu - தென்படவில்லை செம் சுடர் தாமரை கண் செல்லனும்,Sem sudar thaamarai kan chellanum - சிவந்த காந்தியையுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் ஸ்ரீமானும் வாரான்,Vaaraan - வந்து தோன்றவில்லை ஆல்,Aal - ஆதலால் நின்று உருகுகின்றேன்,Nindru uruguginraen - நிரந்தரமாக உருகாநின்றேன். இனி,Ini - இந்நிலைமையில் செஞ்சு இடர்,Senju idar - (எனது) மனத்துயரை தீர்ப்பார் ஆர்,Theerpaar aar - போக்குவாரா? |