| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3159 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்.) 10 | நின்று ருகுகின்றேனே போல நெடு வானம் சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10 | நின்று உருகுகின்றேன் போல,Nindru uruguginraen pola - நிரந்தரமாக உருகிக் கிடக்கிற என்னைப்போல நெடுவானம்,Netuvaanam - பரந்த ஆகாசமானது உருகி சென்று,Urugi sendru - உருகிப்போய் (அதனால்) நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிய பனித்துளியாய் செல்கின்ற,Selginra - நடந்து வருகின்ற கல்குல் வாய்,Kalgul vaay - இராப்பொழுதிலே அன்று ஒருகால்,Andru orukaal - முன்பொரு காலத்திலே வையம்,Vaiyam - உலகத்தை அளந்த,Alandhu - அளந்து ஆக்கிரமித்துக் கொண்ட பிரான்,Piran - எம்பிரான் வாரான் என்று,Vaaraan endru - வரமாட்டானென்றாகிலும் ஒன்று,Ondru - ஒரு வார்த்தையை ஒருநாள் சொல்லாது,Orunaal sollaadhu - ஒரு தரமேனும் சொல்லாமல் உலகு,Ulaku - லோகமானது உறங்கும் ஓ,UrangumO - உறங்குகின்றதே! ஐயோ! |