| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3161 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேணுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு கா புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ? அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன்? ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று.) 1 | எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்! நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1 | அன்னைமீர்காள்,Annaimeerkaal - தாய்மார்களே! நீர்,Neer - நீங்கள் என்னை முனிவது,Ennai munivathu - என்னை சீறுவது திருக்குறும் குடி நம்பியை,Thirukkurum kudi nambiyai - திருக்குறுங்குடிப் பெருமானை நான் கண்ட பின்,Naan kanda pin - நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு என் நெஞ்சம்,En nenjam - என் மனமானது சங்கினோடும் நேமினோடும்,Sanginodum neminodum - சங்கு சங்கரங்களோடும் எங்ஙனேயோ,Enganeyo - எப்படிப் பொருந்தும்? எங்கள்,Engal - நாம் அநுபவிப்பதற்குரிய கோலம்,Kolam - அழகிய தாமரை கண்களோடும்,Thaamarai kangalodum - தாமரைபோன்ற திருக்கண்களோடும் செம் கனி வாய் ஒன்றினோடும்,Sem kani vaai ondrinodum - சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும் செல்கின்றது,Selginrathu - நடவாநின்றது. (என்னெஞ்சில் இவையே திகழ்கின்றனவென்றபடி.) |