திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3168 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3168திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகிய குழல் தாழ்ந்த தோள்களோடே கூடின மற்றும் உண்டான திவ்ய அவயவங்களிலே அழகுகள் என் முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் ) 8
கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8
பதவுரை Show / Hide
நல் முகம் கையுள் வைக்கும் என்று,Nal mugam kaiyul vaikkum endru - (இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும்
நையும் என்று,Naiyum endru - நைகின்றாள் என்றும் சொல்லி.
அல்குலும்,Algulum - கடிப்ரதேசமும்
சிறு இடையும்,Siru idaiyum - சிறுசிறு இடையும்
வடிவும்,Vadivum - திருமேனியும்
மொய்ய நின் சூழல்தாழ்ந்த தோள்களும்,Moyya nin soozhal thaazhndha tholgulum - செறிந்து நீண்ட நேச பாசங்கள் தாழ்ந்துவரப்பெற்ற திருத்தோள்களும்
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும்
முனிதிர் கை கொள்,Munithir kai kol - சீறிப் பொடிகின்றீர்கள்;
மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mai kol maadat thirukkudungudi nambiyai naan kanda pin-; - மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
செய்ய தாமரை கண்ணும்,Seyya thaamarai kannum - செந்தாமரை போன்ற திருக்கண்களும்
பாலியேன் முன் நிற்கும்,Paaliyaen mun nirkum - பாவியான என்னுடைய கண்முன்னே புலப்படா நின்றன.