| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3171 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்.) 11 | அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல் அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11 | அறிவு துரிய பிரானை,Arivu thuriya piranai - ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும் ஆழி அம் கை யணையே,Aazhi am kai yanaiye - திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே அலற்றி,Alattri - வாய்வெருவி ஈறிய,Eeriya - பரிமளம் மிக்க நல் மலர் நாடி,Nal malar naadi - நல்ல பூக்களை நாடுபவரான நன் குருகூர் சடகோபன் சொன்ன-;,Nan kurukoor Sadagopan sonna-; - நன் குருகூர் சடகோபன் சொன்ன-; ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள் திருக் குறுங்குடி அதன் மேல்,Thiru kudungudi adhan mel - திருக்குறுங்குடி விஷயமாகப்பேசினதாய் குறி கொள்,Kuri kol - எம்பெருமானுடைய திவ்யாவயவ திவ்யாயுத திவ்யாபரணலாஞ்சனம்களை யுடையதான இவைபத்தும்,Ivaipaththum - இத்திருவாய்மொழியை அறிய,Ariya - பொருளும் தெரியும்படி கற்று,Katru - ஓதி வல்லார்,Vallar - தேறினவர்கள் ஆழ் கடல்,Azh kadal - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள் வைட்டணவர்,Vaittanavar - சிறந்த ஸ்ரீஐவஷ்ணவர்களாகக் கொண்டாடப்படுவர்கள். |