| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3182 | திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11 | கூந்தல்,Koondhal - விலக்ஷணமான மயிர் முடியையுடையனான மலர் மங்கைக்கும்,Malar manghaikum - பெரியபிராட்டிக்கும் மண் மடந்தைக்கும்,Man madanthaikum - பூமிப்பிராட்டிக்கும் குலம் ஆயர் கொழுந்துக்கும்,Kulam aayar kolundhukkum - நல்லகுடிப்பிறப்பையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கும் ஆய்ந்த,Aayndha - ஆராய்ந்து அருளிச் செய்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;,Thamizh maalai aayiraththul ivaiyum oru paththum vallaar-; - தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-; உலகில்,Ulagil - இவ்வுலகத்திலே ஏந்து பெரு செல்வத்தர் ஆய்,Aendhu peru selvaththar aay - எல்லாரும்கொண்டாடும்படியான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியையுடையராய்க் கொண்டு கேள்வன் தன்னை,Kelvan thannai - நாயனான எம்பெருமான் விஷயமாக வாய்ந்த வழுதி வனம் நாடன் மன்னுருருகூர் சடகோபன்,Vaayndha vazhuthi vanam naadan mannururukoor sadagopan - ஆழ்வார் குற்றேவல் செய்த,Kuttreval seydh - அந்தரங்கரைங்கர்ய ரூபமாக திரு மால் அடியார்களை,Thiru maal adiyaarkalai - பகவத்பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை பூசிக்க,Poosikka - ஆராதிக்க நோற்றார்கள்,Noatraargal - ஸுக்ருதம் பண்ணினவர்களாவர். |