Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3183 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3183திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி - எனக்கு இவை ஒன்றும் இல்லையே ஆகிலும் நிரதிசய போக்ய பூதனாய் இருந்த உன்னை விட்டு ஒரு படியாலும் நான் தரிக்க மாட்டாமையாலும் அடியேனை விஷயீ கரிக்கைக்காக நீ ஸ்ரீ வர மங்கல நகரிலே வந்து புகுந்து அருளுகையாலும் – உனக்கு அடிமையான இவ்வாத்மாவை நீ போகிடில் இழவு உன்னதாகையாலும் அடியேனைப் பொகட்டு அருள ஒண்ணாது – ஆதலால் அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்.) 1
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே –5-7-1
சேறு,Seru - சேற்று நிலங்களிலே
செந்நெலூடு,Senneloodu - செந்நெற்பயிர்களிடையே
தாமரை மலர்,Thaamarai malar - தாமரைகள் மலரப்பெற்ற
சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - கிரிவரமங்கையென்னும் வானமாமலைப்பதியிலே
வீற்றிருந்த எந்தாய்,Veetrirundha endhaay - இருந்தருளும் எம்பெருமானே!
அரவின் அணை அம்மானே,Aravin anai ammaaney - சேஷசமயனனான தலைவனே!
நோற்ற,Notra - நானாக அனுட்டித்த
நோன்பு இலேன்,Nonbu ilean - கருமயோக முடையேனல்லேன்;
நுண் அறிவு இலேன்,Nun arivu ilean - நுட்பமான ஞானயோகமும் உடையேனல்லேன்;
ஆகினும்,Aakinum - இங்ஙனே நைம்முத வற்றவனேயானாலும்
இனி,Ini - இது முதலாக
உன்னைவிட்டு,Unnaivittu - உன்னை யொழிய
ஒன்றும்,Ondrum - சிறிதும்
ஆற்ற நிற்கின்றிலேன்,Aatra nirkindrilean - தரித்திருக்க மாட்டுகின்றிலேன்;
உனக்கு,Unakku - ஸர்வரஷகனென்று பேர்பெற்றிருக்கிற உனக்கு
அங்கே,Angae - அந்த வானமாமலைபதிதன்னிலே
மிகை அல்லேன்,Migai allean - (ரக்ஷ்யவர்க்கத்தில்) வெளிப்பட்டவனல்லேன் (என்னை ரக்ஷித்தே தீரவேணுமென்றபடி.