திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3185 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3185திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உம்மை விஷயீ கரித்தால் பிரயோஜனம் என் என்னில் - சர்வ பிரகார பரி பூர்ணனான நீ அத்யந்த நிஹீனனான என்னை விஷயீ கரித்துப் பெற்றது ஒரு பிரயோஜனம் கண்டிலேன் - வெறும் உன் க்ருபையாலே செய்து அருளினாய் அத்தனை -அப்படியே மேலும் என் அபேக்ஷிதங்கள் செய்து அருள வேணும் என்கிறார்.) 3
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3
பதவுரை Show / Hide
கருளன் புள்கொடி,Karulan pulkodi - கருடப்பறவையைக் கொடியாகவுடையனாய்
சக்கரம் படை,Sakkaram padai - திருவாழியை ஆயுதமாகவுடையனாய்
வானம் நாட,Vaanam nada - பரமபதத்தை நாடாகவுடையனான பெருமானே!
எம்கார் முகில் எள்ளு,Emkaar mugil ellu - எமக்குக் காளமேகம் போன்ற திருவுருவைக் காட்டி உபசரிக்குமவனே!
தெருள் கொள்,Therul kol - மிகுந்த ஞானத்தையுடையராய்
கால் மறை வல்லவர்,Kaal marai vallavar - நான்கு வேதங்களிலும் உள்ளவர்களான
பலர்,Palar - பல ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaal - வாழப்பெற்ற
கிரீவரமங்கலம் நகர்க்கு,Sreevaramangalam nagarkku - வானமாமலைப்பதிக்கு
அருள் செய்து,Arul seydhu - கிருபைபண்ணி
அங்கு இருந்தாய்?,Angu irundhaay? - அத்திருப்பதியிலே நித்யவாஸம் செய்யுமவனே!
பொருள் அல்லாத என்னை,Porul allaadha ennai - அபதார்த்தமாய் கிடந்தவென்னை
பொருள் ஆகி,Porul aagi - ஸ்வரூபம் பெற்றரளும்படி அங்கீகரித்து
அடிமை கொண்டாய்,Adimai kondaay - (திருவாய்மொழியாடுகையாகிற இக்) கைங்கரியத்தை என் பக்கலிலே திருவுள்ளம் பற்றினாய்; (இப்படியாகச்செய்த மஹோபகாரத்திற்கு)
ஒரு கைம்மாறு அறியேன்,Oru kaimmaaru ariyen - நானொரு கைம்முதலுடையேனாக அறிகின்றிலேன்.