திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3186 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3186திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 4
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே! தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4
பதவுரை Show / Hide
மாறு சேர் படை,Maaru ser padai - விரோதிகளாய்க்கொண்டு சேர்ந்த வேளையையுடைய
நூற்றுவர்,Nuurruvar - துரியோதநாதிகள் நூறு பேர்களும்
மல்க,Malka - தொலையும்படி
அன்று,Andru - அக்காலத்தில்
ஓர் ஐவர்க்கு ஆம்,Or aivarkku aam - பஞ்சபாண்டவர்களுக்குத் துணைவனாயிருந்து கொண்டு
மாயம் போர் பண்ணி,Maayam por panni - ஆச்சரியமான யுத்தத்தை நடத்தி
நீறு செய்த எந்தாய்,Neeru seydha endhaay - நீறுபடுத்தின ஸ்வாமியே!
நீலம் கீண்ட அம்மானே,Neelam keenda ammaaney - பூமியை ப்ரளயாபத்தில் நின்றும் இடர்ந்தெடுத்த பெருமானே!
தேறு ஞானத்தர்,Theru gnaanaththar - தெளிந்த ஞானத்தையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய
வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடைவிடாமல் நடக்குமிடமான
கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப் பதியிலே
ஏறி,Eri - குடியேறி
வீற்றிருந்தாய்,Veetrirundhaay - பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே
உன்னை,Unnai - உன்னை
எங்கு எய்த,Engu eydha - எங்கேவந்து கிட்டுவதாக
கூவுவன்,Koovuvan - நான் கூப்பிடுவேன்? (உன்னை நான் நிர்பந்திருப்பதென்றொரு! பொருளுண்டோ? என்றவாறு.)