| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3187 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 5 | எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே! செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர் கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5 | எய்தக் கூவுதல்,Eydha koovudhal - உன்னைப் பெறுவதற்காகக் கூப்பாடு போடுவதானது எனக்கு ஆவதே,Enakku aavedhe - எனனக்குத் தகுமோ எவ்வ தெய்வத் துளாயும் ஆய் நின்று,Evva dheivaththulaayum aay nindru - எப்படிப்பட்ட சத்ருணமூஹத்தினுள்ளும் ஊர் திருந்து கைதவங்கள் செய்யும்,Kaidhavangal seyyum - க்ருத்ரிமங்களைச் செய்யுமவனான (அதாவது, அஸுரவர்க்கத்தினுள்ளே புத்த விக்ரஹபரிக்ரஹம் பண்ணிக் கலந்து நின்று வைதிகருசியைக் குலைத்து வியாமோஹிப்பித்தவனான) கரு மேனி அம்மாளே,Karu meni ammaaley - கரிய திருமேனி கொண்ட ஸ்வாமியே! செய்த வேள்வியர்,Seydha velviyar - க்ருதக்ருத்யர்களான வையம் தேவர் அறா,Vaiyam dhevar araa - நிலத் தேவர்கள் இடைவிடாமல் வர்த்திக்கிற சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமலைப் பதியிலுள்ளாரெல்லாரும் கை தொழ,Kai thoza - ஸேவிக்கும்படி இருந்தாய்,Irundhaay - எழுந்தருளியிருப்ப வனே! நானும்,Naanum - அடியேனும் அதுகண்டேன்,Adhukandean - அவ்விருப்புக் காணப் பெற்றேன். |