திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3189 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3189திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதார ஸாமதியைக் குலைத்துக் கொண்டு ஸ்ரீரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார்.) 7
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்! செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7
பதவுரை Show / Hide
வந்தருளி,Vandharuli - (பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி
என்நெஞ்சு,En nenju - எனது நெஞ்சை
இடம் கொண்ட,Idam konda - இருப்பிடமாகக் கொண்ட
வானவர் கொழுந்தேத,Vaanavar kolundheyadha - நித்யஸூரிநாதனே!
உலகுக்கு,Ulagukku - இவ்வுலகத்துக்கு
ஓர் முந்தை தாய் தந்தையே,Or mundhai thaai thandaiyae - அநாதிஸித்த மாதாபிதா வானவனே!
முழு ஏழ் உலகும் உண்டாய்,Muzu ezhu ulagam undaay - ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனே!
செம் தொழிலவர்,Sem thozhilavar - சிறந்த அனுட்டானங்களையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய
வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடையறாமல் நடக்கப் பெற்ற
கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப்பதியிலே
அந்தம் இல் புகழாய்,Antham il pugazhaay - முடிவில்லாத புகழையுடையவனாய் எழுந்தருளியிருப்பவனே!
அடியேனை அகற்றேல்,Adiyenai akatrel - என்னைப் புறம்புபடுத்தா தொழியவேணும்.