Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3191 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3191திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அகற்றி யென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணமாக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிற வுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார்.) 9
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9
புள்ளின் வாய் பிளந்தாய்,Pullin vaai pilandhaay - பகாஸுரனையழித்தவனே!
மருது இடைபோயினாய்,Marudhu idai poyinaay - இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து சென்றவனே!
ஏழ் எருது அடர்ந்த,Ezhu erudhu adarntha - ஏழு ரிஷபங்களையும் கலிதொலைத்தன்னாயும்
என்,En - என் நிறத்திலே
கள்ளம் மாயவனே,Kallam maayavaney - கள்ள மாயங்களைச் செய்து போருமவனே!
கரு மாணிக்கம் சுடரே,Karu maanikam sudarey - கரியமாணிக்கத்தின் ஒளிபோன்ற வடிவையுடையவனே!
தெள்ளியார்,Thelliyaar - தெளிந்தவர்களாயும்
திரு நால்மறைசன் வல்லார்,Thiru naal maraichan vallaar - வீலக்ஷணமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களாயுமிருப்பார்
மலி,Mali - நிறைந்திருக்கப்பெற்ற
தண்,Than - குளிர்ந்த
கிரீவரமங்கை உன்,Sreevaramangai un - வானமாமலைப்பதியிலே
இருந்த எந்தாய்,Irundha endhaay - எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியே!
எனக்கு,Enakku - அடியேனுக்கு
உய்யும் ஆறு,Uyyum aaru - உஜ்ஜீவநோபாயத்தை
அருளாய்,Arulaay - அருளிச் செய்ய வேணும்.