திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3192 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3192திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஏதேனும் துர்த் தசையிலும் உன் திருவடிகளே சரணம் என்று இருக்கும் படி என்னைப் பண்ணி யருளின இம் மஹா யுபகாரத்துக்கு பிரதியுபகாரத்துக்கு இல்லை என்கிறார் .) 10
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம் மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10
பதவுரை Show / Hide
சேறு கொள்,Seru kol - சேற்று நிலங்களிலே வளர்கின்ற
கரும்பும்,Karumpum - கரும்புகளும்
பெரு செந்நெலும்,Peru sennelum - பெரிய செந்நெற் பயிர்களும்
மலி,Mali - மலிந்திருக்கப்பெற்ற
தண்,Than - குளிர்ந்த
சிரீவரமங்கை,Sreevaramangai - வானமாமலைப்பதியிலே (எழுந்தருளியிருக்கிற)
நாறு பூ தண் துழய் முடியாய்,Naaru poo than thuzhai mudiyaay - பரிமளம் மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடையவனே!
தெய்வநாயகனே,Dheivanayakaney - தெய்நாயகப் பெருமானே!
எனக்கு,Enakku - அடியேனுக்கு
ஆறு,Aaru - உபாயமோவென்றால்
நின் பாதமே சரண் ஆக,Nin paathame saran aaga - உன் திருவடிகளே உபாயமாக
தந்தொழிந்தாய்,Thandhozindhaay - அநுக்ரஹித்து விட்டாய் (இந்த மஹோபகாரத்திற்கு)
உனக்கு,Unakku - உன் விஷயத்திலே
ஓர் கைம்மாறு ஒன்று நான் இலேன்,Or kaimmaaru ondru naan ilean - ஒரு பிரதியபகாரமு முடையேனல்லேன்;
எனது ஆவியும்,Enadhu aaviyum - என்னுடைய ஆத்மாவும்
உனதே,Unadhey - ஏற்கனவே உன்னுடையதாயிரா நின்றது.