| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3194 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 1 | ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1 | ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய எம்மானே,emmane - எம்பெருமானே! அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது நின்பால்,ninpaal - உன் திறத்தில் அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு கரைய,karaiya - கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே! சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள் சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை) கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன் |