திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3197 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3197திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 4
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி! நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4
பதவுரை Show / Hide
செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள்
காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும்
செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே!
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து
உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே!
எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான
ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே!
நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே
ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன்.