திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3202 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3202திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((இசைவித்தென்னை.) கண்ணாலே காணலாம்படி வரவேணு மென்கிறார்.) 9
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9
பதவுரை Show / Hide
என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை
இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து
உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே
இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே!
அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும்
தலைவா,thalaiva - முதல்வனே!
ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான
திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே
அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்)
உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும்