| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3203 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 10 | வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்! தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10 | வாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல் அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற என் மாயா,en maaya - என் மாயவனே! மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே! ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே! தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே! திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே! அடியேன்,adiyen - அடியேன் உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும் இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ! |