திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3205 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3205திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –முதல் பாட்டில் நிரதிசய போக்யமான சோலையையுடைய திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற நிருபாதிக ஸ்வாமி திருவடிகளைக் கிட்டுவது என்றோ என்று தோழிமாரைக குறித்துச் சொல்லுகிறாள்.) 1
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1
பதவுரை Show / Hide
மான் ஏய் நோக்கு நல்லீர்,Maan ey nokku nalleer - மான் போன்ற நோக்கையுடைய பெண்களே!
வினையேன்,Vinaiyen - பாவியான நான்
வைகலும் மெலிய,Vaigalum meliya - எப்போதும் இளைக்கும்படியாக,
வான் ஆர்வண் கமுகும்,Vaan aarvan Kamookum - ஆகாசத்தை யளாவிய அழகிய அழகிய பாக்மரங்களும்
மது மல்லிகை,Mathu malligai - மதுவொழுகுகின்ற மல்லிகை மலர்களும்.
கமழும்,Kamazhum - வாஸிக்கப்பெற்ற
தேன் ஆர் சோலைகள் சூழ்,Thenar solaigal soozh - தேன் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட
திரு வல்ல வாழ்,Thiru valla vaazh - திருவல்லவாழிலே
உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுகிற
கோனாரை அடி,Konaarai adi - ஸ்வாமியின் திருவடிகளை
அடியேன் கூடுவது என்று சொல்,Adiyen kooduvadhu endru sol - அடியேன் கூடப்பெறுவது என்றைக்கோ?