| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3206 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னுடைய உத்தியோகத்தை இசையாதே இருக்கிற தோழி மாரை அ நு நயித்து நான் திரு வல்ல வாழிலே புக்கு அவன் பாத ரேணுவைச் சூடுவது என்று என்கிறாள்) 2 | என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ! பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள் நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2 | தோழிமீர்காள்,Thozhimeerkaal - தோழிகளே! நீர் எம்மை தலிந்து,Neer emmai thalindhu - நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி என் செய்தீர்,En seydeer - என்ன காரியம் செய்தீர்கள்! தென்றல்,Thendral - தென்றல் காற்றானது பொன் திகழ் புள்ளை,Pon thigazh pullai - பொன்போல் விளங்குகிற தாதுகளையுடைய புன்னை மரங்களென்ன மகிழ்,Magilz - மகிழமரங்களென்ன புது மாதவி,Puthu maadhavi - புதிய குருக்கத்திகளென்ன மீது அணவி,Meedhu anavi - ஆகிய இவற்றின் மேலே படிந்து மணங்கமழும்,Manangamalzum - பரிமளத்தை வீசி உலாவிடமான திருவல்லவாழ்நகரும்,Thiruvalaazhvaakarum - திருவல்லவாழ்ப்பதியிலே நின்ற பிரான்,Nindra piran - நிலைபெற்றிருக்கிறஸ்வாமியினுடைய அடி நீறு,Adi neeru - ஸ்ரீபாத ரேணுவை அடியோம் கொண்டு சூடுவது,Adiyom kondhu sooduvadhu - அடியோம் ஸ்வீகரித்து அணிந்து கொள்வது என்று கொல்,endru kol - என்றைக்கோ? |