திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3207 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3207திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் வேத கோஷமும் வைதிக க்ரியா ஹோமமும் மாறாத திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிற நிரந்தர உபகாரத்தைப் பண்ணுமவன் திருவடிகளை நித்ய அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 3
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப் பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ் நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3
பதவுரை Show / Hide
மலர் சூடும் குழலீர்,Malar soodum kuzhaleer - பூக்களணிந்த கூந்தலையுடைய மாதர்களே!
துயராட்டியேன் மெலிய,Thuyaraattiyeen meliya - துக்கங்களை யனுபவிக்கின்ற நான் இளைக்கும்படியாக
பாடுநல்வேதம் ஒலி,Paadu nalvetham oli - பாடப்படுகின்ற ஸாமவேத கோஷமானது
பரவை திரைபோல் முழங்க,Paravai thiraipol muzhang - கடலின் அலைக்கிளர்ச்சி பொல் முழங்கா நிற்க.
மாடு உயர்ந்து,Maadu uyarnthu - பக்கங்களிலே ஓங்கி
ஓமம் புகை கமழும்,Oomam pugai kamazhum - ஹோமதுமங்கள் பரிமணிக்கப்பெற்ற
தண் திருவல்லவாழ்,Than thiruvallazh - குளிர்ந்த திருவல்லவாழிலே
நிடு உறைகின்ற பிரான்,Nidu uraigindra piran - நித்யவாஸம் பண்ணாநின்ற எம்பிரானுடைய
கழல்,Kazhal - திருவடிகளை
நிக்கலும்,Nigkalum - எப்போதும்
காண்டும் கொல்,Kaandum kol - காணப்பெறுவோமா?