| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3208 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சோலைகளோடே கூடின மாடங்களை யுடைய திரு வல்ல வாழிலே நித்ய ஆஸ்ரித ஸம்ஸ்லிஷ்டனாய் வர்த்திக்கிற உபகாரகன் பக்கலிலே என்னுடைய ஸ்நேஹமாய் இருக்க நீங்கள் நலிந்து என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள்.) 4 | நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ? பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ் நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4 | தோழிமீர்காள்,Thozhimeerkal - தோழிகளே! நீர் எம்மை நிச்சலும் நலிந்து என் செய்தீர்,Neer emmai nichchalum nalindhu en seydeer - நீங்கள் எம்மை எப்போதும் ஹிம்ஸித்து என்ன லாபமடைந்திகோள்! பச்சிலை நின் கமுகும்,Pachilai nin kamugum - பசுத்த இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும் பலவும்,Palavum - பலாமரங்களும் தேங்கும்,Thengum - தென்னை மரங்களும் வாழைகளும்,Vaazhaigalum - வாழை மரங்களும் மச்ச அணி மாடங்கள் மீது அணவும்,Mascha ani maadangal meedu anavum - மச்சுகளின் நிரையையுடைய மாடங்களின் மேலே தழைத்துப் பொருந்தும்படியான தன் திருவல்ல வாழ்,Than thiruvalla vaazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே நஞ்சு அரவு இன் அணைமேல்,Nanjhu aravu in anaimel - (ஆச்ரித விரோதிகளின் மேலே) நஞ்சை யுமிழ்கிற அரவாகிய இனிய படுக்கையின்மேலே யளித்திருக்கிற எம் பிரானது,Em piranadhu - எம் பெருமானுடையதாக ஆய்விட்டது (எதுவென்னில்) நல்நலம்,Nalnalam - (எனது) நற்சீவன் |